search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் பகிர்மான கோட்டம்"

    • பெருந்துறை மற்றும் சோமனூரில் உள்ள கோட்ட பொறியாளர்கள் கட்டுப்பாட்டில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
    • திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் இணைக்க வேண்டும்.

    திருப்பூர்:

    குன்னத்தூர், மங்கலம் மின் பகிர்மான கோட்ட பகுதிகளை திருப்பூரில் இணைக்க கோரி அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு மனு.

    கோவை, ஈரோடு மாவட்டங்களிலுள்ள குன்னத்தூர், மங்கலம் மின் பகிர்மான கோட்ட பகுதிகளை திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் இணைக்க உரிய தீர்வுகாண கோரி அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு சார்பில் அதன் பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் மற்றும் குன்னத்தூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள பத்திர பதிவு, வருவாய் துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை ,கிராம பஞ்சாயத்துக்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களும் கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து பிரித்து திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்ட நிலையில் கடந்த 2011 ல் இருந்து தற்போது வரை மங்கலம் மற்றும் குன்னத்தூர் உப கோட்டங்களில் உள்ள மின்சார வாரிய அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் மட்டும் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள ஈரோடு மற்றும் கோவை மின் பகிர்மான வட்டங்களில் இருந்து வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மங்கலம் சுற்றுப்பகுதிகள் கோவை தெற்கு மின்பகிர்மானத்துடனும், குன்னத்தூர் சுற்றுப்பகுதிகள் ஈரோடு மின்பகிர்மானத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. பெருந்துறை மற்றும் சோமனூரில் உள்ள கோட்ட பொறியாளர்கள் கட்டுப்பாட்டில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டம் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கடந்த ஆட்சியில் எங்களுடைய தொழிற்சங்கம் சார்பில் இது தொட‌ர்பாக பல முறை புகார் மனு அளிக்கப்பட்ட போதும் எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    குறிப்பாக விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு பெறுவது, விவசாயிகளுக்கான மின்சேவைகளிலும் சுணக்கம் ஏற்படுகிறது. மின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்துவது குறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு மின்தடை அறிவிப்புகள் குறித்த தகவல்கள், மற்றும் சோமனூர் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடப்பது குறித்த முன்னறிவிப்பு செய்வதே இல்லை. எனவே தாங்கள் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு திருப்பூர் மாவட்டம் மங்கலம் மற்றும் குன்னத்தூர் உபகோட்டங்களில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களை கோவை, ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு மற்றும் கோவை மின் பகிர்மான வட்டத்தில் இருந்து பிரித்து திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் இணைக்க வேண்டும் என்று அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×